கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகிக்கும் அம்பதலை மற்றும் களனி தெற்கு கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
களனி கங்கையிலிருந்து நீரைப் பெற்றுக்கொள்ளும் Intake பகுதிக்கு அருகில் ஏற்பட்டுள்ள அவசர நிலைமையால் நீரின் தரம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் (DMC) அறிவுறுத்தலுக்கு அமைவாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நீர் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவருவது தொடர்பான மேலதிக அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்கு நுகர்வோரிடம் சபை வருத்தம் தெரிவித்துள்ளது.





