நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு தூதரகம் அவசர அறிவிப்பு

நேபாளத்தில் நிலவும் வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமான அவசர நிலைமையைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, அனர்த்தத்தால் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில் அல்லது அவற்றுக்கு அருகில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர உதவி அல்லது ஒருங்கிணைப்பு தேவைப்படும் இலங்கையர்கள், காத்மாண்டுவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் 24 மணி நேர அவசர தொலைபேசி இலக்கம் +977 9851048653 ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

மேலும், Slemb.kathmandu@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தூதரகத்தைத் தொடர்புகொள்ளலாம்.

இதுவரை, நேபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக எந்தவொரு இலங்கையரும் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கவில்லை என இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore