உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை பிடித்த ருமேஷா தரங்க

இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷா தரங்க, சமீபத்திய உலக தரவரிசையில் மீண்டும் முதலிடத்தை கைப்பற்றியுள்ளார்.

அவர் தற்போது 1,363 தரவரிசைப் புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 1,342 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், கிரெனடாவின் அண்டர்சன் பீட்டர்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் ருமேஷாவுக்கு கடும் சவால் அளித்த இந்தியாவின் நீரஜ் சோப்ரா, 1,301 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

இதன்மூலம் உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் இலங்கை வீரர் மீண்டும் முதலிடத்தை பிடித்திருப்பது நாட்டின் தடகளத்துறைக்கு முக்கியமான சாதனையாக அமைந்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore