விடுமுறை காலத்தில் மின்சாரத்திற்கான தேவை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட கூரை சூரிய மின்தொகுதிகளின் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு தேசிய மின் தொகுதி இயக்குநர் (National System Operator) அறிவித்துள்ளார்.
இதன்படி, சம்பந்தப்பட்ட சூரிய மின்தொகுதிகள் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை மின் உற்பத்தியை நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்களில் மின்சாரப் பயன்பாடு குறைவடையும் நிலையில், தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவுறுத்தலுக்கு உட்பட்ட அனைத்து கூரை சூரிய மின் உற்பத்தியாளர்களும் குறிப்பிடப்பட்ட நேரத்தில் மின் உற்பத்தியை நிறுத்தி, உரிய ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.





