மாத்தறையில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வந்த கணவன்–மனைவி தம்பதி, சுமார் ரூ.70 மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் (ICE) மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சந்தைப் பெறுமதி சுமார் ரூ.70 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த போதைப்பொருட்கள் எங்கிருந்து பெறப்பட்டன என்பது தொடர்பிலும், சந்தேகநபர்களுக்கு பரந்தளவிலான போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புகள் உள்ளனவா என்பது தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





