புற்றுநோயாளிகளுக்கான 160,000 தடுப்பூசிகள் கிடங்குகளில் தேக்கம்!

இலங்கையில் புற்றுநோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய தடுப்பூசிகள் சுமார் 160,000 அளவில் மருத்துவ விநியோகக் கிடங்குகளில் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) மற்றும் மருத்துவ விநியோகப் பிரிவு (MSD) இடையிலான நிர்வாக மற்றும் ஒருங்கிணைப்பு பிரச்சினையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

சுமார் ரூ.900 பெறுமதியுடைய ஒரு தடுப்பூசி, கறுப்புச் சந்தையில் ரூ.25,000-க்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீமோதெரபி உள்ளிட்ட சிகிச்சைகளைப் பெறும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்க இந்தத் தடுப்பூசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தடுப்பூசிகளை மீண்டும் லேபிளிங் செய்து நாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால், புதிய தொகுதி கிடைக்க சுமார் மூன்று மாதங்கள் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சு உடனடியாக தலையிட்டு, மருத்துவ நிபுணர்களுடன் கலந்துரையாடி நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு விரைவான தீர்வை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore