கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆகிய இரண்டு விடுமுறை நாட்களில் அதிவேக வீதிகளைப் பயன்படுத்திய வாகனங்கள் மூலம் ரூ.124.57 மில்லியனுக்கும் அதிகமான வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த இரண்டு நாட்களில் அதிவேக வீதி வலையமைப்பில் மொத்தமாக 325,316 வாகனங்கள் பயணித்துள்ளன.
🔹 ஆகஸ்ட் 26:
163,763 வாகனங்கள்
வருமானம் – ரூ.60,409,995
🔹 ஆகஸ்ட் 27:
161,553 வாகனங்கள்
வருமானம் – ரூ.64,164,930
இந்த இரண்டு நாட்களிலும் தெற்கு அதிவேக வீதி (E01) மற்றும் வெளிவட்ட அதிவேக வீதி (E02) ஆகியவற்றில் அதிகளவிலான வாகனப் போக்குவரத்து பதிவாகியுள்ளது.





