நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து தங்க நகை திருட்டு – இருவர் கைது

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளப் பேரிடருக்கு மத்தியில், உயிரிழந்த ஒருவரின் உடலில் இருந்து தங்க நகையை திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பரவிய காணொளி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்வான் மாவட்டம் பாரத்பூர் பகுதியில் வைத்து 25 மற்றும் 38 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, நேபாளத்தின் போதே கோஷி நதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தோர் மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பேரிடர் சூழ்நிலையை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களிலிருந்தும் பொருட்களை திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore