டிசம்பர் முதல் சைபீரியா–இலங்கை இடையே புதிய விமான சேவை

ரஷ்யாவின் சைபீரிய பிராந்தியத்தில் உள்ள நோவோசிபிர்ஸ்க் நகரத்திலிருந்து கொழும்புக்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்க S7 Airlines திட்டமிட்டுள்ளது.

இந்த புதிய சேவை 2026 டிசம்பர் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோவோசிபிர்ஸ்க் நகரின் Tolmachevo விமான நிலையத்திலிருந்து கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்தில் இரண்டு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த விமானங்கள் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயண நேரம் சுமார் 10 மணித்தியாலங்கள் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தொழில்நுட்ப ரீதியான எரிபொருள் நிரப்பும் இடைநிறுத்தமும் இடம்பெறும். அந்த நேரத்தில் பயணிகள் விமானத்திலேயே இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விமான இணைப்பு மூலம் ரஷ்யாவின் சைபீரியப் பகுதிகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பயண வசதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக ஹிக்கடுவ, பெந்தோட்டை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட இலங்கையின் பிரபல சுற்றுலாத் தளங்களுக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய சேவைக்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore