கொழும்பு துறைமுகம் உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களில் இடம்பிடிப்பு

கொள்கலன் கையாளும் திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ள கொழும்பு துறைமுகம், உலகின் முன்னணி 20 கொள்கலன் துறைமுகங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் கொழும்பு துறைமுகம் ஊடாக 4,444,034 கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் கையாளப்பட்ட 3,972,053 கொள்கலன்களுடன் ஒப்பிடுகையில், இது 471,981 கொள்கலன்களின் அதிகரிப்பாகும்.

இதன் மூலம் கொள்கலன் செயற்பாடுகளில் சுமார் 11.9 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது.

2025ஆம் ஆண்டு இறுதியில் உலகளாவிய தரவரிசையில் 26ஆவது இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், தற்போதைய செயல்திறன் காரணமாக முன்னணி 20 துறைமுகங்களுக்குள் முன்னேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் முக்கியமான மீள்கப்பல் போக்குவரத்து மையமாக செயல்படும் கொழும்பு துறைமுகம், கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் முக்கிய கடல் வர்த்தகப் பாதைகளுடன் தொடர்புபட்டுள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் மட்டும் 2.915 மில்லியன் கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், அந்தக் காலப்பகுதியில் 13.9 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

அதிகரித்து வரும் கொள்கலன் போக்குவரத்துக்கு ஏற்ப துறைமுகத்தின் உட்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டு திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன், எதிர்வரும் 1 முதல் 3 ஆண்டுகளில் துறைமுகத் துறைக்கு சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளை ஈர்ப்பதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore