இந்தியாவில் அதிகாலை 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஷஹீத் பகத் சிங் நகர் பகுதியில் இன்று (02) அதிகாலை 1.44 மணியளவில் 3.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்திய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, பூமிக்கு அடியில் சுமார் 5 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி 31.124 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 76.040 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் அமைந்திருந்ததாக ஆரம்பகட்டமாக கணிக்கப்பட்டுள்ளது.

எனினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் அல்லது பாதிப்புகள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore