பழ விவசாயிகளுக்கு புதிய பயிர் காப்புறுதித் திட்டம்

பழப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை இயற்கை அனர்த்தங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆபத்துகளிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய காப்புறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் கீழ் அன்னாசி, பப்பாளி, வாழை உள்ளிட்ட விவசாயத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்படும் பயிர்களுக்கு காப்புறுதி வழங்கப்படவுள்ளது.

🔹 அடிப்படை காப்புறுதித் தொகையில் சுமார் 7% பிரீமியம் செலுத்தி காப்புறுதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.
🔹 இயற்கை அனர்த்தங்கள், நோய்கள், பூச்சித் தாக்குதல்கள் மற்றும் காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்கள் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும்.
🔹 பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு ரூ.300,000 முதல் ரூ.400,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.

விவசாயிகள் பயிர்ச்செய்கையில் தொடர்ந்து ஈடுபடுவதற்கான ஆபத்துகளை குறைத்து, அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதே இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கம் என விவசாய மற்றும் விவசாயக் காப்புறுதி சபை தெரிவித்துள்ளது

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore