5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின
2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று (செப்டம்பர் 2) வெளியாகியுள்ளன.
மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான doenets.lk ஊடாக பார்வையிட முடியும்.
இம்முறை பரீட்சைக்கு 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 289,867 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
அவர்களில் சுமார் 56,000 மாணவர்கள் வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.





