5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை: தேசிய ரீதியில் அதிகூடிய புள்ளிகள் வெளியானது

2026ஆம் ஆண்டுக்கான 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில், சிங்கள மொழிப் பிரிவில் அதிகபட்சமாக 193 புள்ளிகளும், தமிழ் மொழிப் பிரிவில் 188 புள்ளிகளும் பதிவாகியுள்ளன.

சிங்கள மொழியில் 193 புள்ளிகளைப் பெற்ற மாணவர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழ் மொழிப் பிரிவில் 188 புள்ளிகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.

இம்முறை பரீட்சைக்கான அதிகூடிய வெட்டுப்புள்ளி 139 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 56,000 மாணவர்கள் அந்த வெட்டுப்புள்ளியை விட அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளனர்.

மேலும், விசேட தேவையுடைய 1,018 மாணவர்களும் இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 09ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கு 294,132 மாணவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 289,867 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

மாணவர்கள் தங்களது பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக பார்வையிட முடியும்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore