இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு அடுத்த வாரம் இலங்கைக்கு வரவுள்ளது.
செப்டம்பர் 10 முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டம் தொடர்பான 7ஆவது மதிப்பாய்வு மற்றும் 2026ஆம் ஆண்டுக்கான Article IV ஆலோசனைகள் குறித்து அரசாங்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், நாட்டின் தற்போதைய பேரண்டப் பொருளாதார நிலைமை மற்றும் பொருளாதார மீட்சியை வலுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளும் மதிப்பாய்வு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜயத்தின் நிறைவில் IMF தரப்பில் அறிக்கை அல்லது அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
📌 IMF திட்டத்தின் கீழ் இதுவரை இலங்கைக்கு கிடைத்துள்ள நிதி ஆதரவு சுமார் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





