ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார்.
எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் ஆணைக்குழுவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.
சில மணிநேரங்கள் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், ஆணைக்குழு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான எயார்பஸ் விமான கொள்வனவு தொடர்பான சர்ச்சை குறித்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





