2026ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் 96,040 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் – 10,155 பேர்
டெங்கு காரணமாக உயிரிழந்தோர் – 72 பேர்
அதிக பாதிப்பு – மேல் மாகாணம்: 50,760 பேர்
மாவட்ட ரீதியில்,
🔹 கம்பஹா – 20,444
🔹 கொழும்பு – 19,008
🔹 கண்டி – 7,043
🔹 களுத்துறை – 6,181
🔹 மாத்தறை – 6,154
நாடளாவிய ரீதியில் 50 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் தொடர்ந்தும் டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு பரவலைத் தடுக்க சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றுவது அவசியம்.





