கற்பிட்டியில் கர்ப்பிணிப் பெண் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பலகுடாவ பகுதியில், 26 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நேற்று (03) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண், கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த பெண்ணுடன் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் கணவரை விட்டு பிரிந்து, சந்தேகநபருடன் வசித்து வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக இடம்பெற்று வந்த குடும்பத் தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 36 வயதுடைய சந்தேகநபர், சம்பவம் இடம்பெற்ற சுமார் 45 நிமிடங்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ICE போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

⚠️ சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் விசாரணைகளின் அடிப்படையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore