பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூன்று பேருக்கும் வெளிநாடு செல்ல உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான வழக்கில் இவர்களுக்கு எதிராக முன்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணை நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மூவரும் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore