மட்டக்களப்பில் கட்டுமானக் குழியில் விழுந்து 6 வயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு, நெடியமடு பகுதியில் பாலம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற குழியில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.

நேற்று (04) முற்பகல் இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தச் சம்பவத்தில், நெடியமடு பகுதியைச் சேர்ந்த நாகராசா நவதீப் என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

வீட்டின் வேலிக்கு அருகாமையில் அமைந்திருந்த குறித்த குழியில் சிறுவன் தவறி விழுந்த நிலையில், உடனடியாக மீட்கப்பட்டு கரடியனாறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றுள்ளதுடன், ஆயித்தியமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கட்டுமானப் பணிகளின்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாததே விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore