ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg தீவு அருகே நங்கூரமிடப்பட்டிருந்த எண்ணெய் கப்பல் மீது நான்கு அமெரிக்க ஏவுகணைகள் தாக்கியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சனிக்கிழமை இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்தத் தாக்குதலில் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், கப்பலில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எவ்வாறாயினும், தாக்குதல் தொடர்பில் ஈரான் அதிகாரிகளிடமிருந்து இதுவரை உத்தியோகபூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகமும் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் Kharg தீவு முக்கிய பங்கு வகித்து வருகிறது. தற்போதைய மோதலுக்கு முன்னர் நாட்டின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90 சதவீதம் இந்தத் துறைமுகம் ஊடாக கையாளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.





