நைஜீரியாவின் ரிவர்ஸ் மாகாணம், ஒக்கிரிகா பகுதியில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட கசிவினால் வெளியேறிய நச்சு வாயுவை சுவாசித்ததில் 37 பேர் உயிரிழந்துள்ளனர்.
கச்சா எண்ணெயை சட்டவிரோதமாக திருட முயன்றபோது குழாயில் துளையிடப்பட்டதாகவும், இதன் காரணமாக அதிக அழுத்தத்துடன் கச்சா எண்ணெயுடன் நச்சு வாயுவும் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பலர் மூச்சுத்திணறல் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்ததுடன், தப்பிச் செல்ல முயன்ற சிலர் அருகிலிருந்த ஆற்றில் விழுந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில் 37 பேர் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சிலர் காணாமல் போயுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பாதிக்கப்பட்ட சிலர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் நைஜீரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





