ஏயார்பஸ் விமான கொள்முதல் விவகாரம்: இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் சமல் ராஜபக்ஷ வாக்குமூலம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, ஏயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இன்று (08) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அவர் இன்று காலை 10.00 மணியளவில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கிய பின்னர், சமல் ராஜபக்ஷ ஆணைக்குழு வளாகத்திலிருந்து வெளியேறிச் சென்றுள்ளார்.

ஏயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவரிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore