🇱🇰 காசநோய் கட்டுப்பாட்டுக்கு இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தொழில்நுட்ப உதவி

இலங்கையின் காசநோய் (TB) கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த இந்தியா தொடர்ந்து தொழில்நுட்ப மற்றும் தேவையான பிற உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு திமோர் தலைநகர் திலியில் நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்காசிய பிராந்தியக் குழுவின் 79ஆவது கூட்டத்தொடருக்கு இடையே, இலங்கை சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டா ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடியதுடன், குறிப்பாக காசநோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் TB கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தை மேலும் மேம்படுத்த தேவையான தொழில்நுட்ப உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என இந்திய அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன், இலங்கையின் முதன்மை சுகாதார சேவைகளை வலுப்படுத்துதல், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையில் சுகாதாரத் துறையில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்க உள்ளிட்ட இரு நாடுகளின் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore