2026ஆம் ஆண்டுக்கான கொழும்பு மரதன் போட்டி எதிர்வரும் செப்டம்பர் 13ஆம் திகதி காலி முகத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
50ஆவது தேசிய விளையாட்டு விழாவுடன் இணைந்து நடைபெறும் இந்த சர்வதேச மரதன் போட்டி, விளையாட்டு கலாசாரத்தை மேம்படுத்துவதுடன், இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போட்டியில்,
🏃 முழு மரதன்
🏃 அரை மரதன்
🏃 10 கிலோமீற்றர் ஓட்டம்
🏃 5 கிலோமீற்றர் Fun Run
ஆகிய போட்டிகள் இடம்பெறவுள்ளன.
உள்நாட்டு மற்றும் சர்வதேச வீரர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் ஏற்பாடுகள், வெற்றியாளர்களுக்கான பரிசுத் தொகைகள் மற்றும் போட்டி நடைபெறும் பாதைகள் உள்ளிட்ட விபரங்களை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ள நிலையில், குறித்த ஏற்பாடுகளை அமைச்சரவை பதிவு செய்துள்ளது.
📅 திகதி: 13.09.2026
📍 இடம்: காலி முகத்திடல் மைதானம், கொழும்பு





