எல்நினோ தாக்கம்: 8 மாவட்டங்களில் 1,54,167 பேர் பாதிப்பு

எல்நினோ தாக்கம் காரணமாக இலங்கையின் 8 மாவட்டங்களில் 1,54,167 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக 36 பிரதேச செயலகப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 47,368 குடும்பங்கள் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 35 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 40,945 குடும்பங்களைச் சேர்ந்த 1,32,748 பேருக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

🔹 மொனராகலை மாவட்டம் – 42,429 பேர்
🔹 மட்டக்களப்பு மாவட்டம் – 33,394 பேர்
🔹 அம்பாறை மாவட்டம் – 12,047 பேர்

குடிநீர் விநியோக நடவடிக்கைகளில் அதிகளவான மக்கள் மொனராகலை மாவட்டத்தில் பயனடைந்து வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore