இலங்கை நெருக்கடியை எதிர்கொள்ளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எப்போதும் இலங்கைக்கு உறுதுணையாக நிற்கும் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக தனது முதல் இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜ்நாத் சிங், கொழும்பில் நடைபெற்ற இந்திய சமூகத்தினருடனான சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் இலங்கை இடையே நீண்டகாலமாக நிலவி வரும் கலாசார மற்றும் நாகரிகத் தொடர்புகள், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்புத்துறை முன்னேற்றம் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் பாதுகாப்புத்துறை ஏற்றுமதி கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.600 கோடியிலிருந்து ரூ.39,000 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இலங்கை–இந்தியா இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் இந்திய வம்சாவளியினர் முக்கிய பங்காற்றி வருவதாகவும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார்.





