FIFA Series மூலம் இலங்கை கால்பந்துக்கு புதிய வாய்ப்பு – FFSL தலைவர்

FIFA Series அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் இலங்கை கால்பந்து வளர்ச்சியில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FFSL) தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

FIFA வெளியிட்ட அறிக்கையில் கருத்து தெரிவித்த அவர், சர்வதேச அளவில் இலங்கை கால்பந்தின் நிலையை மேலும் உயர்த்துவதற்கு FIFA Series முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் முதலாவது FIFA Series போட்டித் தொடர் நடைபெற்றது. இதில் இலங்கை, பூட்டான், மத்திய ஆபிரிக்கக் குடியரசு மற்றும் பப்புவா நியூ கினியா ஆகிய நான்கு நாடுகள் பங்கேற்றிருந்தன.

இந்தப் போட்டித் தொடர் ஒரு சர்வதேச கால்பந்து போட்டியை நடத்துவதற்கான வாய்ப்பாக மட்டுமன்றி, இலங்கை கால்பந்து உலகளாவிய அரங்கில் தனது இடத்தை உறுதிப்படுத்துவதற்கான முக்கிய கட்டமாகவும் அமைந்ததாக FFSL தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரேஸ்கோர்ஸ் மைதானம் FIFA-வின் FIFA Forward திட்டத்தின் கீழ் சர்வதேச போட்டிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் புனரமைக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் FIFA உறுப்பு நாடுகளின் உட்கட்டமைப்பு மற்றும் கால்பந்து திறன் மேம்பாட்டுக்கு ஆதரவு வழங்குகிறது.

FIFA Series மூலம் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதுடன், வளர்ந்து வரும் கால்பந்து நாடுகளுக்கு கற்றுக்கொள்ளவும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ளவும் சிறந்த வாய்ப்புகள் கிடைப்பதாக ஜஸ்வர் உமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கால்பந்தை சர்வதேச மட்டத்தில் மேலும் முன்னேற்றுவதற்கு இத்தகைய சர்வதேச வாய்ப்புகள் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore