பொலன்னறுவை – ஹபரணை வீதியின் 7ஆம் மைல் கல் பகுதியில் இன்று காலை தனியார் பேருந்தொன்று கால்வாயில் கவிழ்ந்ததில் 20 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து பயணித்துக்கொண்டிருந்த போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து வீதியை விட்டு விலகி, அருகிலிருந்த வறண்ட கால்வாயில் கவிழ்ந்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 4 பேர் ஹபரணை வைத்தியசாலையிலும், 16 பேர் பொலன்னறுவை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





