இலங்கையில் இந்த ஆண்டில் டெங்கு நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளதாக டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 96,847 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதத்தில் இதுவரை மட்டும் 1,356 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 21.27% பேர் அந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
அதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் 19,412 பேரும், கண்டி மாவட்டத்தில் 7,164 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 6,212 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 6,178 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நுளம்பு பெருகக்கூடிய இடங்களை அகற்றி சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதுடன், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு அலகின் தற்போதைய தகவல்களும் நாடு முழுவதும் டெங்கு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை காட்டுகின்றன.





