2025 ஆம் ஆண்டுக்கான G.C.E. உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், அரச பல்கலைக்கழகங்களின் இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் தெரிவின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்பும் வகையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் (UGC) இந்த மாணவர் தெரிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கான பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026 செப்டம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் பதிவை முழுமையாக நிறைவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் தங்களது பல்கலைக்கழக அனுமதி, பதிவு மற்றும் ஏனைய தேவையான தகவல்களை UGC-யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.
👉 பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள மாணவர்கள், வழங்கப்பட்டுள்ள காலக்கெடுவுக்குள் பதிவை நிறைவு செய்வது அவசியமாகும்.





