அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக சாவகச்சேரி பேருந்து நிலைய வளாகத்தில் இன்று (12) மாபெரும் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டம், அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு போதிய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது,

🔴 அரசியல் கைதிகளை விடுதலை செய்தல்
🔴 கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள விடுவித்தல்
🔴 செம்மணி புதைகுழி தொடர்பில் நீதி வழங்குதல்
🔴 மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துதல்

உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore