முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரத்தில் நடைபெறும் Sri Lanka Podujana Peramuna (SLPP) பேரணியில் பங்கேற்பதை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.
SLPP அனுராதபுர மாவட்ட பிரதான அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி இந்த காணொளியை பகிர்ந்துள்ளார்.
காணொளியில், ஆபத்தில் சிக்கியிருக்கும் சிங்கக் குட்டியை காப்பாற்றுவதற்காக பெரிய சிங்கம் ஒன்று வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் காட்சிகள் இடம்பெறுவதுடன், சிங்கள மொழியில் “அனுராதபுரத்திற்கு சிங்கம்” என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
SLPP தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தற்போது விளக்கமறியலில் இருக்கும் நிலையில், மஹிந்த ராஜபக்ஷ அனுராதபுரம் பேரணியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நிலைமையின் பின்னணியில் நடைபெறும் இந்தப் பேரணி, SLPP ஆதரவாளர்களை திரட்டுவதில் கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Watch video :
https://www.facebook.com/share/v/19RsLpeh18/





