உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ள போதிலும், இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.
CPC தலைவர் D.J. ராஜகருணா தெரிவிக்கையில், எரிபொருள் விலை தொடர்பில் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னர், விலை அதிகரிப்பு தொடர்பான அடுத்தகட்ட முடிவு அறிவிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள பதற்றநிலை மற்றும் செங்கடல், பாப் அல்-மண்டப் நீரிணை தொடர்பான நிலைமைகளால் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இதன்படி, Brent கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் சுமார் 104.06 அமெரிக்க டொலராகவும், WTI சுமார் 100 அமெரிக்க டொலராகவும் வர்த்தகமாகி வருகிறது.
இலங்கையில் அடுத்த எரிபொருள் விலை திருத்தம் இந்த மாத இறுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும், சில தனியார் எரிபொருள் விநியோகஸ்தர்கள் டீசல் விற்பனையை கட்டுப்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், Ceypetco எரிபொருள் நிலையங்களில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக CPC தலைவர் தெரிவித்துள்ளார்.





