மத்தள விமான நிலையத்தில் மான் வேட்டை: விமானப்படை அதிகாரிகள் ஐவர் உட்பட 7 பேர் கைது

மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலைய வளாகத்தில் சுற்றித்திரியும் மான்களை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியை வெளிநபர்களுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விமானப்படை அதிகாரிகள் ஐவர் மற்றும் இரண்டு சிவில் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விமான நிலைய வளாகத்தில் வேட்டையாடப்பட்டதாகக் கூறப்படும் மான் இறைச்சியை வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல முயன்றபோது, பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது நடவடிக்கையின்போது, வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகள் மற்றும் விமானப்படைக்குச் சொந்தமான ஜீப் வாகனம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மத்தள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore