பதுளை – மஹியங்கனை வீதியில் வீடு மீது லொறி கவிழ்ந்து விபத்து!

பதுளை – மஹியங்கனை வீதியின் மடித்தலை பகுதியில், வீடொன்றின் மீது லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் குறித்த வீட்டில் வசித்த தந்தையும் அவரது மகனும், அத்துடன் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய நால்வரும் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த லொறியின் பிரேக் செயலிழந்ததன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கு முன்னர், வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றிலும் லொறி மோதியுள்ளது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த லொறி, சுமார் 75 அடி பள்ளத்தில் அமைந்திருந்த வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான வீடொன்றின் மீது கவிழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore