அயர்லாந்து ஒன்றிணைவது ஒரு “சிறந்த விடயம்” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அயர்லாந்துக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ட்ரம்ப், ஒன்றிணைந்த அயர்லாந்து தொடர்பில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.
“அயர்லாந்து ஒன்றிணைவதைப் பார்க்க நான் விரும்புகிறேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு வட அயர்லாந்து மற்றும் பிரித்தானிய அரசியல் கட்சிகளிடையே பல்வேறு எதிர்வினைகள் வெளியாகியுள்ளன. வட அயர்லாந்தின் அரசியலமைப்பு எதிர்காலம் தொடர்பான தீர்மானம் அங்குள்ள மக்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என யூனியனிஸ்ட் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, ட்ரம்பின் அயர்லாந்து விஜயத்திற்கு எதிராக டப்ளின் நகரில் 10,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட பாரிய ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது.





