தல அஜித்தை ஆரத்தழுவி முத்தமிட்ட முதல்வர் விஜய்!

இங்கிலாந்தின் சில்வர்ஸ்டோன் பந்தயக் களத்தில் நெகிழ்ச்சியான சந்திப்பு

இங்கிலாந்தின் உலகப் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயக் களத்தில், தமிழக முதலமைச்சர் விஜய்யும் நடிகர் அஜித்குமாரும் நேரில் சந்தித்து அன்பைப் பரிமாறிக் கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026ஆம் ஆண்டுக்கான Michelin Le Mans Cup பந்தயத் தொடரின் 5ஆவது சுற்று சில்வர்ஸ்டோனில் நடைபெற்று வரும் நிலையில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட முதலமைச்சர் விஜய் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிலையில், போட்டியில் பங்கேற்க வந்த நடிகர் அஜித்குமாரை சந்தித்த முதலமைச்சர் விஜய், அவரை ஆரத்தழுவி முத்தமிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

LMP3 Pro/Am பிரிவில் Ajith RedAnt by Virage அணிக்காக 16ஆம் இலக்க Ligier பந்தயக் காரில் அஜித் குமார் போட்டியிட்டு வருகிறார்.

இருவரும் சந்தித்துக் கொண்ட இந்த நெகிழ்ச்சியான தருணம் தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore