அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை

வி.தீபன்ராஜ்

அகில இலங்கை தமிழ்மொழித்தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ்மொழித்தினப் போட்டிகள் இன்று பத்தரமுல்லை இசுறுபாயவில் இடம்பெற்றன.

இதன்போது, நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பாவோதல் பிரிவு இரண்டில் போட்டியிட்ட மாணவி ப.ஹன்சிகா, தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மாகாண மட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மாணவி ஹன்சிகா, தேசிய மட்டத்திலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்திற்கும், நுவரெலியா கல்வி வலயத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore