பிரிட்டனிலிருந்து வெளியேறுவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தும் கிராமம்!

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட்ஷயர் பகுதியில் உள்ள Piddington என்ற சிறிய கிராமத்தில், பிரிட்டனின் ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) வெளியேற வேண்டுமா என்பது தொடர்பில் குறியீட்டு வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

சுமார் 400 பேர் வசிக்கும் இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள முன்னாள் இராணுவ தளத்தில் 1,256 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்களை தங்க வைக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள கிராம மக்கள், தங்களது பாதுகாப்பு மற்றும் சமூக வாழ்க்கை தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் கிராம சபை மூலம் இந்த வாக்கெடுப்பை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

⚠️ எனினும், இந்த வாக்கெடுப்புக்கு சட்டரீதியாக பிரிட்டனிலிருந்து கிராமத்தைப் பிரிக்கும் அதிகாரம் கிடையாது. இது மக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தும் குறியீட்டு வாக்கெடுப்பு மட்டுமே என BBC தெரிவித்துள்ளது.

அதேவேளை, புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு முழுவதும் நியாயமான முறையில் தங்க வைப்பதற்காக முன்னாள் இராணுவ தளங்கள் உள்ளிட்ட மாற்று இடங்களைப் பயன்படுத்துவதாக பிரிட்டன் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore