பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் – நாடு முழுவதும் அமுல்!

இலங்கையில் பயணிகள் போக்குவரத்து சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் தொழில்நுட்பத் தகுதி மற்றும் வீதிப் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த விதிமுறைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைகள் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபையின் கீழ் இயங்கும் பயணிகள் போக்குவரத்து வாகனங்களுக்கு பொருந்தும்.

அத்துடன் பாடசாலை போக்குவரத்து, அலுவலக போக்குவரத்து மற்றும் வாடகை அடிப்படையிலான விசேட சுற்றுலா சேவைகளில் பயன்படுத்தப்படும் வாகனங்களும் இந்த புதிய விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

2026 மே 19ஆம் திகதி வெளியிடப்பட்ட அசாதாரண வர்த்தமானி இலக்கம் 2489/22 மூலம் வாகனங்களின் தொழில்நுட்ப நிலை மற்றும் பாதுகாப்பு தொடர்பான குறைந்தபட்ச தரநிலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

வாகனங்களின் இயந்திரக் கோளாறுகள் மற்றும் போதிய பராமரிப்பு இல்லாமையும் நாட்டில் இடம்பெறும் பாரிய வீதி விபத்துகளுக்கான காரணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு புதிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

📌 நோக்கம்: பயணிகள் போக்குவரத்து வாகனங்களின் பாதுகாப்புத் தரத்தை உயர்த்தி, வீதி விபத்துகளை குறைப்பது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore