வேல்ஸ் கடற்கரையில் பேருந்தின் நீளத்திற்கு சமமான பிரமாண்ட ஜெலிமீன்!

வேல்ஸ், பெம்புரோக்ஷயர் கடற்கரையில் 10 முதல் 15 மீற்றர் நீளமுடையதாகத் தோன்றும் பிரமாண்ட “Lion’s Mane” ஜெல்லிமீன் ஒன்று கடலில் நீந்திய காட்சி கேமராவில் பதிவாகியுள்ளது.

Trefin கடற்கரைக்கு அருகில் சுதந்திர நீச்சலில் ஈடுபட்டிருந்த 21 வயதான கடல் பாதுகாப்பு ஆர்வலர் Iestyn Morgan இந்த ஜெல்லிமீனை கண்டுள்ளார். அதன் நீண்ட கொடுக்குகள் பார்வைக்கு அப்பாற்பட்ட தூரம் வரை நீண்டிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“Lion’s Mane” ஜெல்லிமீன்கள் பொதுவாக ஸ்கொட்லாந்தைச் சுற்றியுள்ள குளிரான கடல் பகுதிகளில் காணப்படுகின்றன. இவை சுமார் 3 மீற்றர் வரை உடல் நீளத்தையும், 30 மீற்றருக்கும் அதிகமான நீளமுடைய கொடுக்குகளையும் கொண்டிருக்கக்கூடும்.

கடல் உயிரியல் நிபுணர்களின் தகவலின்படி, இதன் கொட்டு மிகவும் வலிமையானதாக இருந்தாலும் பொதுவாக ஆபத்தானது அல்ல. இருப்பினும், ஜெல்லிமீன்களை தொடாமல் இருப்பதே பாதுகாப்பானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வேல்ஸ் கடற்பரப்பில் சமீபகாலமாக ஜெல்லிமீன்கள் மற்றும் வெப்பமான நீரை விரும்பும் சில கடல் உயிரினங்கள் அதிகளவில் தென்படுவதாக Morgan குறிப்பிட்டுள்ளார்.

இந்த அரிய காட்சிகளை பதிவு செய்வதன் மூலம் கடல் சூழல் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore