இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் – 18 பேர் உயிரிழப்பு

இலங்கையில் 2026ஆம் ஆண்டு இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இன்று (15) நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பதிவான 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த ஆண்டில் இதுவரை துப்பாக்கிகள் உள்ளிட்ட 797 ஆயுதங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கடந்த 2025ஆம் ஆண்டு 2,404 துப்பாக்கிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகவும் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore