இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தை கடந்தது

இவ்வாண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் செப்டம்பர் 14ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 16 இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் மொத்தமாக 1,609,759 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

செப்டம்பர் 1ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான 14 நாட்களில் மட்டும் 74,637 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இந்திய சுற்றுலாப் பயணிகளே அதிகம்

2026ஆம் ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்களின் எண்ணிக்கை 408,024 ஆகும்.

அதனைத் தொடர்ந்து:

🇬🇧 ஐக்கிய இராச்சியம் – 155,798

🇨🇳 சீனா – 105,294

🇩🇪 ஜெர்மனி – 94,007

சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, செப்டம்பர் மாதத்தின் முதல் 14 நாட்களிலும் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். அந்தக் காலப்பகுதியில் மட்டும் 22,541 இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore