நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (18) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

எயார்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான இலஞ்ச வழக்கு விசாரணைக்காக சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

குறித்த விமானக் கொள்முதல் விவகாரத்தில் 80 இலட்சம் அமெரிக்க டொலர் இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் நாமல் ராஜபக்ஷ செப்டம்பர் 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் செப்டம்பர் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வழக்கு மீண்டும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் விமானக் கொள்முதல் தொடர்பான பணமோசடி விசாரணையிலும் நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டு, அந்த வழக்கில் செப்டம்பர் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore