பொகவந்தலாவவில் உள்ள புனித மேரி தேசியப் பள்ளியின் 20 மாணவர்களுக்கு (18) அன்று போக்குவரத்து பொலிசாரால் விசேட பயிற்சி மற்றும் காவலர் சீருடைகள் வழங்கப்பட்டன.

குறித்த பாடசாலை முன்பாக காலை மற்றும் பாடசாலை நிறைவடையும் நேரம் என்பவற்றில் பொலிசாருடன் இணைந்து போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் வீதிப் பாதுகாப்பு கடமையில் மாணவர்களையும் ஈடுபடுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 20 மாணவர்களுக்கு குறித்த பயிற்சி பொலிசாரால் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் வீதிப் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடும் போது அணிவதற்கான சீருடைகளும் இதன்போது பொலிசாரால் வழங்கி வைக்கப்பட்டது
மேலும், போக்குவரத்துக் கட்டுப்பாட்டிற்குத் தேவையான சீருடைகள் பொகவந்தலாவ காவல்துறையைச் சேர்ந்த காவலர் காமினி ராஜபக்ஷ (84548) என்ற அதிகாரியால் அந்த மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.





