நீர்கொழும்பு சீ ஸ்ட்ரீட் பகுதியில் தனது வீட்டில் வளர்த்து வந்த இரண்டு செல்லப்பிராணி நாய்களை மனிதாபிமானமற்ற முறையில் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படும் 67 வயதுடைய ஒருவரை நேற்று (10) பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸார் தெரிவித்ததன்படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது நாய்களின் வாய்கள் கயிற்றால் இறுக்கமாக கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, இரண்டு நாய்களும் பொலிஸாரின் பாதுகாப்பில் எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், அவை தற்போது நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (11) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





