2026 முதல் 4 மாதங்களில் லஞ்ச குற்றச்சாட்டில் 25 அரச அதிகாரிகள் கைது

2026 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் 25 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது.

2026 ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை வெளியிடப்பட்ட முன்னேற்ற அறிக்கையின்படி, இந்தக் காலப்பகுதியில் லஞ்சம் தொடர்பான வழக்குகளில் மொத்தம் 51 பேர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அவர்களில் 14 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் மூலம் அரசுக்கு சுமார் ரூ. 1.9 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், 2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலத்தில் லஞ்சம் தொடர்பாக மொத்தம் 3,349 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.

தற்போது லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 314 வழக்குகள் நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் விசாரணையில் உள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore