பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்த முயன்றதாக அந்நாட்டு அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், பஹ்ரைன் வெளிவிவகார அமைச்சகம், அதிகாலை நேரத்தில் ஈரானைச் சேர்ந்த பல ட்ரோன்கள் பஹ்ரைன் எல்லையை இலக்காகக் கொண்டதாக தெரிவித்துள்ளது. எனினும், தாக்குதல் இடம்பெற்ற சரியான இடம் அல்லது இலக்கு குறித்து விபரங்கள் வெளியிடப்படவில்லை.
இந்தச் சம்பவம் பஹ்ரைனின் இறையாண்மையையும் சர்வதேச சட்டத்தையும் மீறும் மிகக் கடுமையான செயல் எனவும், பொதுமக்களின் பாதுகாப்பை அச்சுறுத்தியதுடன், பிராந்தியத்தில் பதற்றத்தைக் குறைக்கும் முயற்சிகளையும் பாதித்துள்ளதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுவரை, இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஈரான் எந்தவித உத்தியோகபூர்வ பதிலையும் வெளியிடவில்லை.





