கண்டி | ஜூலை 23
திகணை மற்றும் மெணிகின்ன பகுதிகளில் 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
இன்று ஜூலை 23 காலை 8.30 மணி முதல் அமுலுக்கு வந்துள்ள இந்த நீர் விநியோகத் தடை, ஜூலை 25 ஆம் திகதி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காகவே இந்த நீர் விநியோக இடைநிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள நீர் வழங்கல் சபை, நீர் விநியோகம் வழமைக்கு வரும் வரை நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு நுகர்வோரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.





